Author: காயத்ரி

ஜனவரி 25, 2022 சிலுசிலுவென்ற காற்று சாரலையும் உள்ளே கொண்டு வந்தது. ஊட்டி போல் இருக்கும் கோயமுத்தூர் ஐ.ஓ.பி. காலனியில்தான் சித்தி இருந்தாள். அந்தத் தனி வீட்டைச் சுற்றிலும் செண்பக மரமும் முல்லைக் கொடியும் பன்னீர் ரோஜாக்களும் பூத்துக் குலுங்கின. வெற்றிலைக் கொடியொன்று செண்பக மரத்தை அணைத்துக் கொண்டு கவலையில்லாமல் சந்தோஷமாக சுற்றிக் கிடந்தது. “இந்தா புள்ள, பொளுதன்னிக்கும் செடியவே பாத்துகிட்டு நின்னா எப்புடி, சாரலடிக்குது பாரு. ஜன்னலச் சாத்து” என்றாள் அம்மா. சின்னது சிணுங்கியது. ஜன்னலைச் அடைத்துவிட்டு அவளை எடுத்துக் கொண்டேன். “குளந்தைய இப்படிக் குடு. நீ பெரியவன குளிப்பாட்டு.” பெரியவனுக்கு நான்கு வயதாகிறது. அடுத்தது பெண் குழந்தை. ஆறு மாதம். வீடு முழுவதும் நிறைந்து இருந்த மனிதர்களைக் கண்டு பெரியவனுக்கு நிலைகொள்ளவில்லை. சென்னையின் மூக்கோட்டை அபார்ட்மெண்ட்டில் புழுக்கத்தில் இடுங்கி இடுங்கி விளையாடிக் கொண்டிருந்தவனுக்கு சித்தியின் வீடு அரண்மனை போல் தோன்றியிருக்க வேண்டும். ஓரிடத்தில் நிற்காமல் ஓடிக்…

Read More

நவம்பர் 26, 2022 ‘இவனை, இந்த ஷ்யாமை, எப்படி உனக்குத் தெரியும்? உன் ஃப்ரெண்ட் லிஸ்ட்ல இருக்கானே பொறுக்கி’ என்று குமுதா என்னிடம் கேட்டபோது ரம்யா திடுக்கிட்டது தெரிந்தது. கண்ணால் ஏதோ குமுதாவுக்குச் சொல்ல முற்பட்டாள் ரம்யா. குமுதா புரியாமல் புருவத்தை சுருக்கிக்கொண்டு தாடையை முன் நீட்டி ‘ஹ(ன்)’ என்றாள். தலையிலடித்துக்கொள்ள முடியாதபடி எதுவும் பேச இயலாதபடி ‘ஹி ஹி…சரி, சரி, அப்புறம்…’ என்று சங்கடத்துடன் பேச்சை ரம்யா மாற்றத் தொடங்கியபோது நான் இடைமறித்தேன். ‘யார சொல்ற?’ என்று குமுதாவைக் கேட்டபோது ரம்யா ‘விடுப்பா…வேற…’ என்றாள். என் தாட்டியான குரலையும் முறைப்பையும் பார்த்து தான் தோற்றுப் போனது அவளுக்குத் தெரிந்தது. இது எதுவும் கிஞ்சித்தும் புரியாமல் கடுப்பாக என்னைப் பார்த்து ‘இதோ இடது கைப்பக்கம் இளிச்சுகிட்டு நிக்கறானே, இந்தக் கம்னாட்டிதான்’ என்றாள் குமுதா. ரம்யா பதறுவது தெரிந்தது. குமுதா மேற்கொண்டு பேச முற்படுவதற்குள் ‘குமுதா அந்த ஷ்யாமோட பொண்டாட்டிதான் இந்த சித்ரா’…

Read More

பந்துபோல் உருண்டு வந்த உளுந்து மாவை கரண்டியில் எடுத்து ஜாங்கிரித் துணியில் இட்டு கொதிக்கும் எண்ணெயில் சுழிசுழியாக சமையல் மாமி வரைந்து கொண்டிருந்ததை பார்த்துக் கொண்டிருந்தாள் தைலாம்பாள். கறுப்பாக எண்ணெய் பிசுக்கு அடுக்கடுக்காகப் படிந்த அந்த வாணலியை வாஞ்சையோடு பார்த்தாள். திருமணம் நிச்சயமானபின் அனுப்பர்பாளையத்தில் இருந்த தங்கவேல் கவுண்டர் பாத்திரக் கடையில் பெரியம்மா தட்டித் தட்டிப் பார்த்து வாங்கியது. “இந்தக் கைப்புடி இல்லாத கல்கத்தா சட்டிய எடுத்துக்குங்க. ரொம்ப நல்லா இருக்கும்” என்ற கவுண்டரைப் பார்த்து “சரி! இவ பேர் பொறிச்சுக் குடுங்க” என்று பெரியம்மா லிஸ்ட் போட்டு வாங்கிய பல பாத்திரங்களில் இந்த வாணலிதான் முதல் பாத்திரம். இந்த ஐம்பது வருடங்களில் தன் பெயர் பொறிக்கப்பட்ட பல பாத்திரங்கள் வளைந்து நெளிந்து அடிப்பிடித்து பிளந்து இறந்து போனதில் உயிரோடு கடைசியாக எஞ்சி இருப்பதும் இது ஒன்றுதான். அவ்வப்போது தைலா என்று பொறிக்கப்பட்டிருக்கும் எழுத்தை ஆள்காட்டி விரலால் தடவித் தடவிப் பார்ப்பாள்,…

Read More

வசந்த கால உழவு, வசந்த கால விதைப்பு, காற்று, மலர்கள், பரிச்சயமான பறவைகள்… வழக்கமான வசந்தத்துக்காக நாங்கள் ஏக்கத்துடன் காத்துக் கொண்டிருந்தோம். கொஞ்சம் மழை அல்லது அதிக மழை, வெவ்வேறு விதமாக ஒளிரும் சூரியன், ஆனால் மாற்றமில்லாத நிலம், அனேகமாக ஒரே அளவில் பரிச்சயமான பயிர்கள்… ஆனால் விதைகளை நாசமாக்கி, உமியை விதைத்து, எங்களுடைய வழமையான ஏர்ப்பாதையை மாற்ற வந்தான் பகைவன். விலை உயர்ந்த, எங்களுக்குப் பிரியமான பொருட்களெல்லாம் மரம் எரிவது போல் கேவலமாக எரிந்து போயின. வழியில் அவர்கள் இருமருங்கிலும் இருக்கும் மரங்களுக்கு, கிராமங்களுக்கு, காடுகளுக்கு, நகரங்களுக்கு ஒவ்வொன்றாகத் தீ வைத்தனர். நெருப்பில் படபடக்கும் மரங்களும், கற்களும், அவற்றிலிருந்து வரும் கரும் புகையும், மெழுகின் மென்மை இல்லாத இந்த பயங்கர மெழுகுவர்த்தியை எந்தக் கடவுளுக்காக ஏற்றினர்? இதில் நாம் எந்தப் பாத்திரத்தை ஏற்று நடிக்க வந்திருக்கிறோம்?  நாமும் தீயில் உருகி நெருப்புத் துகள்களாக வானத்தை நோக்கிச் செல்ல வேண்டுமா? நம்மில்,…

Read More

பத்து  பெண்கள் மேடம் க்ரோபூவின் கடையில் வேலை செய்தனர். அழகுடன் சிலர், கொஞ்சம் அழகு கம்மியாக சிலர். ஆனால் பத்தும் வாயாடிகள். உதட்டுச் சாயம், பட்டுக் காலுறைகள், குட்டைப் பாவாடை என்று இருந்த அவர்கள் ஒவ்வொருவருக்கும் கூடவே ஒரு சோகக் காதல் கதையும் இருந்தது.    அவர்களுக்கு நடுவே, இருக்கும் இடமே தெரியாமல் அமைதியாக மெலிந்த தேகத்துடன் இருந்தாள் எமிலி.   ஒரு மாலைப் பொழுதில் தன்னந்தனியாக, ஒரு குழந்தையைப் போல் மேடம் க்ரோபூவின் கடைக்கு வந்து சேர்ந்தாள் எமிலி. அவள் சேர்ந்த தினம் ஒருவருக்குமே ஞாபகத்தில்  இல்லை. அவள் எங்கிருந்து வந்தாள் என்றும் யாருக்கும் தெரியாது. அவள் பேசாததால் ஊமை என்றே நினைத்து விட்டனர்.   அவள் வேலையில் சேரும்போது ஒரு குழந்தையைப் போல் இருந்தாள். வயதை யூகிக்க முடியாத முகத்துடன், இன்று இருப்பது போலவே அன்றும் இருந்தாள். கனவுகளற்ற, உணர்ச்சிகளற்ற அந்த அகண்ட கண்களில் அவளது வயதையோ, முதிர்ச்சியையோ…

Read More

மிஸ்.ஸ்தெபானீ த பீஷெத் பார்ப்பதற்கு விசித்திரமாக இருந்தார். சரியாக வளராதது போல் தோற்றமளிக்கும் ஒல்லியான கை கால்கள். அவர் தலை அந்தச் சன்னமான நீள கழுத்திற்கு மேல் ரொம்பப் பெரிதாக இருந்தது. முகத்தைச் சுற்றி அவர் அணிந்திருந்த கஞ்சி போட்ட முக்காடு மாதிரியான துணியே அவர் தலை உடைந்து தோள்களின் மேல் விழாமல் காப்பாற்றுவது போல் இருந்தது. பிரபு வம்சாவளியில் வந்த ஸ்தெபானீ த பீஷெத்தின் முன்னோர்களின் படாடோபம் அவரின் ஆடம்பரமான தலையலங்காரத்தில் அடைக்கலமாகியிருந்தது. அவருடைய குறுகிய மண்டையோட்டின் மேல் அடுக்கடுக்காக இருந்த சுருண்ட முடியலங்காரம், சமச்சீராக வெள்ளித் தோட்டாக்களை வைத்துக் கட்டிய கட்டிடம் போல் இருந்தது. மிஸ் பீஷெத்திற்கு இளமைக்காலமே இருந்ததில்லை போல. அவள் குழந்தை உடையிலிருந்து நேரடியாக  காலரிலும் மணிக்கட்டிலும் இளஞ்சிவப்பு ஃப்ரில்ஸ் வைத்த இந்தச் சாம்பல் நிற உடைக்கு மாறியது போல் இருந்தது.  தந்தத்தினால் வேலைப்பாடு செய்யப்பட்ட பிடிகளையுடைய இரண்டு குடைகளை அவர் வைத்திருந்தார்.  ஒன்று, இளஞ்சிவப்பு நிறத்தாலானது,…

Read More