காயத்ரி ஆர். சின்னப் பூனை ஒன்று எங்கோ கத்தும் சத்தத்தைக் கேட்டுக் கொண்டே கண்விழித்தேன். மணியைப் பார்த்தால் 5.45. கண் எரிந்தது. இன்னும் கொஞ்சம் தூங்கினால் தேவலாம்போல் இருந்தது. மாமரத்தில் நூற்றுக்கணக்கான பறவைகள் கூவிக்கொண்டிருந்தாலும், பூனையின் குரல் தனித்துக் கேட்டது. தலைமுடியை அள்ளி முடிந்துகொண்டு தூக்கக் கலக்கத்தில் தள்ளாட்டமாய் பால்கனியில் நின்று பார்த்தேன். பூனைக்குட்டி எதிர் அபார்ட்மெண்டில் இருக்கிறது போல. கியா கியாவென்று சத்தம் அதிகமாக இருந்தது. பல் தேய்த்துவிட்டு கீழிறங்கிப் பார்க்கலாம் என்று பேஸ்டை பிரஷ்ஷில் பிதுக்கிக் கொண்டிருந்தபோதே எங்கள் அபார்மெண்ட் கீழ் சத்தம். பல் தேய்த்துக்கொண்டே மறுபடி பால்கனி சென்று எட்டிப் பார்த்தால், கார் நிறுத்துமிடத்தில் சாம்பல் நிறத்தில் ஒரு குட்டி ஊரைக் கூட்டிக் கொண்டிருந்தது. ஒன்றரை மாதக் குட்டியாக இருக்கலாம். அம்மாவை விட்டு எப்படிப் பிரிந்து வந்தது? பாவம் பசி! எவரேனும் அடித்துத் துரத்துவதற்கு முன் அதற்கு இத்தணுண்டு பாலை வைத்துவிட்டு வரலாம் என்று மனம் பரபரத்தது. வேகவேகமாக பல் தேய்த்துவிட்டு,…
Author: gayathri Ram
ஜூலை 10, 2023 ஜூலை ஒன்பதுடன் எங்களுடைய படப்பிடிப்பு முடிவுக்கு வந்தது. என்னுடைய கணவனாக குறும்படத்தில் நடித்த மேகவண்ணன் அவர் குடும்பத்துடன் பிரான்ஸின் தென் பகுதியிலிருக்கும் மோன்பெல்லியே என்ற ஊருக்கு செல்வதாகச் சொன்னார். அங்கே அவருக்கு ஒரு வீடு இருந்தது. ஜூலை மாதம் பிரான்ஸிலிருக்கும் குழந்தைகளுக்கு கோடை விடுமுறை. ஒருவர் பாக்கியில்லாமல் அவரவருக்கு ஏற்ற இடங்களுக்கு குழந்தைகளை இட்டுச் செல்கிறார்கள். நீலவண்ணனுக்கு இரண்டு பெண்கள். மூத்த பெண் அவளுடைய காதலனுடன் தனி வீட்டில் வசிக்கிறாள். சின்னவள் எம்மா. பத்தாவது படிக்கிறாள். மேகவண்ணனும் அவர் மனைவி மரியாவும் மகள் எம்மாவும் மோன்பெலியேவில் பதினைந்து நாட்கள் தங்கத் திட்டமிட்டிருந்தனர். ‘நீயும் வருகிறாயா?’ என்று கேட்டார் மேகவண்ணன். ‘ஆசையாகத்தான் இருக்கிறது. ஆனால் குடும்பத்துடன் நேரத்தை செலவழிக்கச் செல்லும்போது இந்தக் கரடி எதற்கு’ என்றேன். ‘உன்னை பதினைந்து நாளும் எங்களோடு இருக்கச் சொல்லவில்லை. சொல்லவும் முடியாது. நடுவில் வரும் சனி ஞாயிறன்று எங்களுடன் இருக்கலாம். ஜூலை 15,…
பெப்ருவரி 1990 பத்தாவது முழுப்பரிட்சைக்கு இன்னும் சில நாட்களே இருந்தன. பேபி ஆறாவது. ஹரி எஞ்சினியரிங் கடைசி ஆண்டு. ஒவ்வொரு நாளையும் சமாளிப்பது பிரம்ம பிரயத்தனமாக இருந்தாலும் எப்படியோ வாழ்க்கை ஓடுகிறது. அதுவும் வேகமாக. சட்டென்று அம்மாவுக்குத் தலை நரைத்து வயசானவளாகக் காட்சியளிக்கிறாள். அப்பாவும் தளர்ந்து போனது தெரிகிறது. ஹரி அப்பாவை இரு சக்கர வாகனம் ஓட்ட விடுவதில்லை. கல்லூரிக்கு செல்லும் முன் அப்பாவை அவர் அலுவலகத்தில் விட்டுவிட்டுப் போகிறான். வரும்போது அழைத்துக்கொண்டு வருகிறான். அப்பா அம்மாவை இவ்வளவு அழகாக கவனித்துக்கொள்ளும் அவனுக்கு எங்கிருந்து இந்த புத்தி வந்தது? ஏன் என்னிடத்தில் மட்டும் பிரச்சனை? நான் என்ன தவறு செய்தேன்? நான் ஏதாவது தப்பான சமிக்ஞை கொடுக்கிறேனா? குழப்பம் அதிகமாகியது. சுமதியை அவ்வப்போது வழியில் பார்த்துக்கொண்டிருந்தேன். பஸ் ஸ்டாண்ட் அருகில் ஒரு அறை மட்டுமே இருக்கும் வீட்டில் இருந்தவள் இப்போது புருஷனைக் கூட்டிக்கொண்டு கோயமுத்தூர் சென்றுவிட்டாள். எங்களைப் பார்க்க சிரமமாக இருந்ததோ…
ஜூலை 2023 ‘இந்த அபார்ட்மெண்ட் ரொம்பப் பழசு, இல்லையா?’ என்று சாந்த்ராவிடம் கேட்டால் ‘இல்லையில்லை, அவ்வளவு பழசில்லை. 1860ல் கட்டியதுதான்’ என்றார். பாரிஸிலுள்ள பல கட்டடங்கள் மிகவும் பழமையானவை என்றாலும் அவற்றை அழகாக பராமரித்து வருகிறார்கள். 1200களில் கட்டிய கட்டடங்களையெல்லாம் புதுப்பித்து உறுதியாக வைத்திருக்கிறார்கள். அரசாங்கத்தைக் கேட்காமல் கட்டடங்களின் வெளியில் எந்த மாற்றமும் செய்ய இயலாது. நாத்ருதாம் கட்ட உபயோகித்தக் கல்லில்தான் இந்த வீட்டின் இந்தப் பகுதி கட்டப்பட்டிருக்கிறது என்றெல்லாம் பெருமை கொள்கிறார்கள். ஈஃபில் டவர், நாத்ருதாம், மோன்மார்த்தர் போன்ற புகழ் வாய்ந்த சின்னங்கள் உங்களின் பால்கனியில் இருந்து பக்கத்தில் தெரிந்தால் உங்கள் வீட்டின் விலை சில கோடிகளுக்கு எகிறும். வீதியில் நடக்கும்போது அபார்மெண்ட்களின் முன் நின்று அண்ணாந்து பார்ப்பார் சாந்த்ரா. கண்கள் பளிச்சிட ‘இந்தக் கட்டடங்களுடைய கூரைகள்தான் என்னை வசீகரிக்கின்றன’ என்று புன்னகைத்துக்கொண்டே சொல்வார். கையை நீட்டி ‘இதோ பார்த்தாயா! ஓஸ்மான் (Haussmann) கட்டிய கட்டடங்களிலெல்லாம் இரண்டாம் மாடிக்கும் ஐந்தாம்…
18 ஜூலை 1986 கோனேஸ்வரி, அவ அம்மா, அப்பா எல்லாரையும் விட்டுட்டு இங்க வந்திருக்கா. அவளோட அண்ணன் போர்ல செத்துப் போனதுக்கு அப்பறம் அவங்க அம்மாவும் அப்பாவும் பயந்துகிட்டு அவளை மட்டும் இங்க அனுப்பிட்டாங்க. அவளோட சொந்தக்காரங்களுக்கு தெரிஞ்ச ஒருத்தவங்க வீட்டுக்கு. அவங்க இவளை ஹாஸ்டல்ல சேர்த்துட்டாங்க. பாவம்! அம்மா அப்பாவை அடிக்கடி கூப்பிட முடியாது. சில சமயத்துல அவளோட கண்ணு ரெட்டா இருக்கும். அவ அழுதிருக்கான்னு தெரியும். ஆனால் நான் பேசாம அவகிட்ட போய் உட்கார்ந்துப்பேன். அவ அனுமதிச்சா அவ கையைப் பிடிச்சுகிட்டு உட்கார்ந்திருப்பேன். அந்த நொடில எனக்கான ஆதுரத்தையும் தேடிப்பேன். பல சமயம் வார்த்தைகளே வேஸ்டுன்னு தோணும். நம் கஷ்டத்தைப் புரிஞ்சுண்டு அமைதியா நம்மோட மணிக்கணக்கா உட்கார ஒருத்தர் இருந்தாலே போதும். சிட்னி கார்ட்டன் மாதிரி. லூசி மானெட் மாதிரி. ஹெர்க்யூல் பய்ரோ மாதிரி. மிஸ் மேபில் மாதிரி. அவங்களோட மணிக்கணக்கா என்னால உட்கார முடியும். எனக்கு எப்பவும்…
29 ஜூன் 2023, வியாழக்கிழமை துப்பாக்கிச் சத்தம் மனதை என்னவோ செய்தது. நியூஸில் காண்பித்த அந்த சிசிடிவி பதிவில் துப்பாக்கியை காரின் உள்ளே வைத்து பாயிண்ட் ப்ளாங்கில் சுடுகிறார் அந்தக் காவலர். கார் சிறிது தூரம் சென்று ஒரு கம்பத்தில் அடித்து நின்றது. ‘பஸ் வராது, பஸ்ஸை எல்லாம் எரிக்கிறார்கள்’ என்று ஒரு பெண்மணி நாங்கள் பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருக்கும்போது சாந்த்ராவிடம் சொன்னார். சிந்துஜா, லாவண்யா, நான் மூவரும் சாந்த்ராவுடன் மோன் மார்த்தர் போகலாம் என்று முடிவு செய்தோம். பக்கத்திலேயே பேருந்து நிறுத்தம் இருந்ததால் அங்கு நின்று கொண்டிருக்கும்போது இப்படி ஒரு செய்தி. நாங்கள் பாரிஸில் இறங்கியதற்கு முந்தைய நாள் நாஹேல் என்ற பதினேழு வயது அல்ஜீரிய வம்சாவளி சிறுவனை ஊரின் புறநகர் பகுதியான நான்தெர்ரில் (Nanterre) ஒரு காவலர் சுட்டுக் கொன்றிருந்தார். அந்தச் சிறுவனின் காரை நிறுத்தி பேப்பர்களைக் கேட்க, அவன் காவலர்கள் கேட்டுக் கொண்டிருக்கும்போதே வண்டியைக் கிளப்பியிருக்கிறான்.…
” La guerre; c’est la guerre des hommes; la paix, c’est la guerre des idées.” – Victor Hugo 18 ஜூலை 1986, வெள்ளிக்கிழமை இன்று பதிமூன்று வயது முடிகிறது. என் பிறந்தநாள் வந்தாலே டயரி ஞாபகம் வரும். குண்டு தமிழ் டீச்சர் ஞாபகம் வரும். என் சந்தோஷம் நாசமான நாள் என்று ஞாபகம் வரும். அதனால டயரி எழுதறதே இல்லை. சாமிகிட்ட மட்டும்தான் பேசுவேன். ‘இவ்வளவு கஷ்டப்படறியே, சாமி இருந்தா உன்னைக் காப்பாத்தி…’ என்று பெனாத்தா முடிக்கறதுக்கு முன்னாடி அவ வாயை மூடிடுவேன். அடுத்த முறை அவளை ஆரம்பிக்கவே விடக்கூடாதுன்னு நினைச்சுப்பேன். ‘கல்கண்டு தாத்தா சொல்லிருக்கா நாம படற கஷ்டமெல்லாம் நம்ம கர்மா. அதை இப்படிக் கஷ்டப்பட்டு தீர்த்துதான் ஆகணும். நாம செய்ய வேண்டியதெல்லாம்…
28 – 30 ஜூன் 2023 ஆளாளுக்கு இரண்டிரண்டு பெரிய சூட்கேஸ்களைத் தூக்கிக்கொண்டு நாங்கள் நான்கு பேர் சென்னையிலிருந்து பிரான்ஸுக்கு பயணித்தோம். முதலாமவர் எல்லோருக்கும் தெரிந்த, எண்பதுகளில் ஹீரோயினாக நடித்த, இப்போது பல படங்களில் அம்மாவாக நடித்துக் கொண்டிருக்கும் சிந்துஜா ராஜா. அவர் என் அம்மாவாக நடிக்க இருந்தார். அவருக்கும் எனக்கும் எட்டு வயதுதான் வித்தியாசம். சினிமாவில் இந்த சகஜங்களையெல்லாம் ஏற்று திறமையாக அப்பா வேடங்களில் கலக்கும் ஶ்ரீதர் அருணாச்சலம்தான் இரண்டாவது நபர். ‘என்ன சார், இவ்வளவு யங்கா இருக்கீங்க, உங்களைவிட பெரிய ஹீரோக்களுக்கு எல்லாம் அப்பாவா நடிக்கிறீங்க’என்று சீண்டினால் தெய்வீக சிரிப்பு சிரித்தார். அவர் வாயிலிருந்து எதுவும் வெளியில் வராதாம். ஒரு வேளை உனக்கே மாமனாரா நடிக்கறேனே என்ற எகத்தாளமாகக் கூட இருக்கலாம். அவருக்கு 65 வயது. மூன்றாமவர் எங்கள் இயக்குனரின் தோழி. அவருக்கு பிரான்ஸ் செல்ல வேண்டும் என்று வெகுநாட்களாக ஆசை. ஆனால் தனியாகச் செல்ல, ஒற்றையாளாக அங்கு…
10 ஜூலை 1986, வியாழக்கிழமை என் பதிமூணாவது பிறந்தநாளுக்கு இன்னும் எட்டு நாள்தான் இருக்கு. என்னோட பத்தாவது பிறந்தநாளன்னிக்கு ஆரம்பிச்ச டயரி அன்னிக்கு ஒரு நாள்லயே முடிஞ்சு போச்சு. அதுக்கப்பறம் எழுதலை. எனக்கு அந்த சம்பவத்துக்கு அப்புறம் எழுதப் பிடிக்கல. அன்னிக்குதான் கடைசியா ரொம்ப சந்தோஷமா இருந்தது. என்னால ஹரி செஞ்சதை யார் கிட்டயும் சொல்ல முடியல. எப்படி சொல்றது? அப்படி சொல்ற மாதிரி யாரும் என்கிட்ட க்ளோஸ் இல்ல. சுமதி அக்காவும் என்கிட்ட அவ்வளவா பேச மாட்டா. அவளுக்கு பிரண்ட்ஸ் கூட்டம் ஜாஸ்தி. நான் அந்த சம்பவத்துக்கு அப்புறம் வீட்டில் தனியா இருக்கும் வாய்ப்பில்லாமல் பார்த்துண்டேன். வீட்டிலும் யாராவது ஒருத்தர் எப்பவும் இருந்ததனால் இதுவரை பிரச்சனை எதுவும் பெருசா இல்லை. ஆனாலும் ஹரியைப் பார்க்கும் போதெல்லாம் பயமா இருந்தது. என்னைப் பார்த்தாலே அவன் கோண வாய் சிரிப்பு சிரிக்கறான். எங்கள் வீட்டில் ஹரிக்கு மட்டும் ஒரு தனி ரூம்.…
3 20 ஜூலை, 2023 ஒராதூர், பிரான்ஸ் அருணாவின் சொல் என்னை வதைத்தது. என் பள்ளித் தோழி கோனேஸ்வரியின் ஞாபகம் வந்தது. எங்கே, என்ன செய்து கொண்டிருக்கிறாளோ? நந்தன் தன் ஊரை நோக்கி காரோட்டிக்கொண்டிருக்க, நானும் கயலும் பின்சீட்டில். காரில் முன் இருக்கைகளில் அவர்களுக்குள் அமைதியாய் ஒரு பிரளயம் நடந்து கொண்டிருந்ததை என்னால் உணர முடிந்தது. நந்தனுக்கு வயது முப்பத்தி ஐந்து. பதினெட்டு வயதில் தன் தாயை இலங்கையில் விட்டுவிட்டு வந்தவர் இன்னமும் அவரை சந்திக்கவில்லை. எப்பேர்ப்பட்ட துர்பாக்கியம்! அம்மாவை பிரான்ஸிற்கு அழைத்து வர அனுமதி மறுத்தனர். நந்தனாலும் இலங்கை செல்ல முடியாத சூழல். அவர் தாய் வீடியோ அழைப்பில் என்னிடம் கதறியது மனதைக் குடைந்தது. அவருக்கு இந்த வருடமும் வீசா தர மறுத்து விட்டார்களாம். ‘என் தாய் உங்களைவிட நான்கு வருடங்கள்தான் பெரியவர்’ என்று சொன்ன அருணாவும் நந்தனும் என்னைத் தங்கள் தாயாக வரித்துக்கொண்டனர். ‘அம்மம்மா’என்று கயல் குட்டி அழைத்தபோது…