2 « La jeunesse n’aime pas les vaincus » – Simone de Beauvoir 18 ஜூலை, 1983 இன்னிக்கு எனக்கு பர்த்டே! டென்த் பர்த்டே! குண்டு தமிழ் டீச்சர் இந்தபர்த்டேவிலிருந்து தினமும் டயரி எழுதச் சொன்னார். அம்மாவிடம் கேட்டு நோட்டுவாங்கினேன். அடுத்த வருடம் டயரி வாங்கிக் கொடுக்கறேன்னு அம்மா சொன்னா. ஸ்கூல்ல இருந்து மூணு மணிக்கு வந்துட்டேன். அம்மாகிட்ட ஒரு மணி நேரம்விளையாடிட்டு வரேன்னு சொல்லி வெளியே ஓடினேன். உமா, மீனா, தேவி எல்லாரும்விளையாட தேனு வீட்டுக்கு வரச் சொன்னாங்க. எங்கடி ஓடறன்னு அக்கா சுமதி கத்தினாள். தேனு வீட்டுக்கு போறேன்னு சொன்னேன். என் தங்கை பேபி (அவள் பெயர் ஷண்முகப் ப்ரியா, வீட்டுல பேபின்னு கூப்பிடுவோம்) நானும் வரேன்னு சொன்னா. அவளையும் இழுத்துண்டு ஓடினேன். தேனு…
Author: gayathri Ram
1 இந்த இடத்தை முன்னரே ஏதோ ஒரு ஜென்மத்தில் பார்த்திருக்கிறேன். குடை போன்று விரிந்திருந்த இந்த மரத்தை,இந்த மின்சாரக் கம்பியை, இந்த வீட்டை… இவையெல்லாவற்றையும் பார்த்த ஞாபகம் தேசலாய் வந்தது. கண்டிப்பாக இது என் வீடாக இருந்திருக்க வேண்டும் போன ஜென்மத்தில். பிரான்ஸின் வெர்சாயிலிருந்து(Versailles) லிமோஜ் (Limoges) போகும் வழியில் இருந்தது அந்தக் கிராமம். ஒராதூர்-ஸ்யூர்-க்ளான் (Oradour-Sur-Glane). காரில் வரும்போதே பாழடைந்த கட்டடங்களுடன் இருந்த அந்தக் கிராமம் புலப்பட்டது. ‘இதோ வந்தாச்சு,வந்தாச்சு, கடைசியா இங்க வந்துட்டேன்’ என்று மனதில் சொல்வதாய் நினைத்துக்கொண்டு சத்தமாகப் பேசிவிட்டேன். இப்போதெல்லாம் அடிக்கடி இப்படித்தான் மனதில் நினைப்பதை உரக்கப் பேசிவிடுகிறேன். காரை ஓட்டிக்கொண்டிருந்த நந்தன் சாலையிலிருந்து கண்களை எடுக்காமல் மென்மையாகப் புன்னகைத்தார். அவர் மனைவி அருணா தலையாட்டினார். அவர்களுடைய ஆறு வயது மகள் கயல் என்னை ஆர்வமாக வேடிக்கை பார்த்துக்கொண்டு வந்தாள். மாரி அலியாதி மூன்று வயது, மோனிக் அர்னோ பத்து வயது, மாரி அவ்ரீல் அறுபத்தாறு…
https://www.youtube.com/watch?v=4JVM3iz3GKA
https://www.youtube.com/watch?v=dd6YU6M7K8s
கட்டுரைகள்
https://www.youtube.com/watch?v=fIm4bwue79o
ஜனவரி 04, 2022 ராம ராம ராம சீதா ராம ராம ராம் என்று ஒரு மாமி இழுத்து இழுத்துப் பாடிக் கொண்டிருந்தாள். மல்லி முல்லை ரோஜா மாலைகளின் மணம் எதுக்களிக்க அப்பாம்மை கால் நீட்டி கூடத்தில் சவமாய்ப் படுத்திருந்தாள். பின் தெருவிலும் ஒரு இளவட்ட பயல் ஆஸ்துமாவால் அதே நாள் இறந்து போயிருந்தான். அவன் சாவுக்கு வந்த பலர்,இந்த வீட்டின் முன் இருந்த ஷாமியானாவைப் பார்த்து,எங்கள் வீட்டுக்கு மாரில் அடித்துக் கொண்டு வந்து, மடிசார் கட்டிக் கொண்டு அமைதியாக படுத்துக் கிடக்கும் கிழவியைப் பார்த்தவுடன் ‘என்னடி கெரகமிது’ என்று விழித்துவிட்டு, நான் விளக்கி வழி சொன்னவுடன் விறுவிறுவென்று திரும்பி வாசல் தாண்டி மறுபடி நெஞ்சிலடித்துக் கொண்டு ஓடினர். பத்து பெண்கள், மூன்று ஆண்கள் என்று சோடை போகாத பதிமூன்றை கனஜோராகப் பெற்றுப் போட்டு வாழ்வாங்கு குடும்பம் நடத்தி கண்ணை மூடியிருக்கிறாள். என் மாமனார் முதல் பிள்ளை என்பதால் அவரோடுதான் கடைசி…
ஜனவரி 22, 2022 நசநசவென்று இருந்தது கவிதாவுக்கு. அவளுடைய உடை தொப்பலாக வியர்வையில் நனைந்திருந்தது. டஃபில் பேகிலிருந்த மாற்றுடையை எடுத்துக் கொண்டு வருணுடைய டான்ஸ் ஸ்டுடியோவின் மேலே இருந்த ராகேஷின் ஜிம்மில் அனுமதி பெற்று ஒரு குளியல் போட்டு உடை மாற்றி வந்தாள். மலேஷியாவில் நடக்கப் போகும் நட்சத்திர இரவு நிகழ்ச்சிக்காக நடனப் பயிற்சி தினமும் நடந்து கொண்டிருந்தது. அவளுடன் ஆடுபவர்கள் எல்லோரும் அவளுக்குப் புதியவர்கள். இதற்கு முன்னால் அவர்கள் யாரையும் அவளுக்குப் பரிச்சயம் இல்லை. டான்ஸ் ஸ்டுடியோவை விட்டுத் தளர்வாக வெளியே வந்தாள். கவிதா இப்போதுதான் சினிமாவில் காலூன்ற ஆரம்பித்திருக்கிறாள். வெண்ணிலவே முகம் காட்டு படத்தில் ஹீரோயினுக்குத் தோழியாக நடித்திருந்தாலும் காத்திரமான பாத்திரப் படைப்பு. அந்தப் படம் அமோக வெற்றி பெற்றதால் மக்கள் இப்போது அவளை அடையாளம் கண்டு கொள்கிறார்கள். படங்களில் நடிக்க வாய்ப்பும் வந்து கொண்டிருக்கிறது. வெ.மு.காவுக்குப் பிறகு அவளது வாழ்க்கை சட்டென்று மாறிப் போனது. …